ஆறுதல் நிறுவனத்தின் 11வது ஆண்டு பொதுக்கூட்டம்

ஆறுதல் நிறுவனத்தினுடைய பதினொராவது ஆண்டு பொதுக்கூட்டம் திரு.ராஜன் நைல்ஸ் தலைமையில் கடந்த 15-12-2018 அன்று ஆறுதல் அலுவலகத்தின் பிரதான மண்டபத்தில் காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

ஆறுதல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா 2018ஆம் ஆண்டிற்கான ஆறுதல் நிறுவனத்தின் முன்னேற்றத் திட்டங்களை முன்வைத்தார். அத்தோடு நிதி முகாமைத்துவ பிரதிநிதியால் நிதி அறிக்கை முன்வைக்கப்பட்டது. இவை உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தொடர்ந்து 2019 ஆம் ஆண்டிற்கான ஆறுதல் நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

ஆறுதல் நிறுவன நிர்வாக இயக்குனர்கள், பணிப்பாளர்கள் மற்றும் முகாமைத்துவப்பிரிவின் பிரதிநிதி ஆகியோர் இக் கூட்டத்தில் பங்குபற்றினர்.

Comments are closed.