உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை வழிப்படுத்தல் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சுடனான கலந்துரையாடல்

உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை வழிப்படுத்தல் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சுடனான கலந்துரையாடல்

கொரோனா பேரிடர் காலத்தில் நடாத்தப்படவுள்ள அரச போட்டிப் பரீட்சையான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சையை எதிர்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்குரிய செயற்றிட்டம் வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் ஆறுதல் மற்றும் தமிழி அமைப்புக்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்குரிய திட்டமிடலைச் செய்தவதற்காக நேற்றைய தினம் (15.07.2021) வடமாகாண கல்வி அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலானது கல்வி அமைச்சின் செயலாளர் திரு. இ. இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. சுந்தரம் டிவகலாலா அவர்களும், பேராசிரியர் அ.சண்முகதாஸ் , […]

ஆய்வுக்கட்டுரை பிரசுரிப்பு

ஆறுதல் நிறுவனத்தின் மகுட வாசகமாகிய “வடலிகள் வானுயரும்” என்பதனை உளமாற ஏற்றுக் கொண்ட திரு மணிவண்ணன் அவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரையினை ஆறுதல் இணையப் பக்கத்தில் பிரசுரிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்… அன்பர் மணிவண்ணனிற்கு எங்கள் வடலிகள் சார்பில் மிக்க நன்றி. இத்தகைய ஆய்வுக்கட்டுரைகளை அன்பர்கள் யாரும் எழுதி இருந்தால் அவற்றின் தரம் கண்டு எங்கள் இணையப் பக்கத்தில் பிரசுரிப்பதற்கு விரும்புகின்றோம்

மரம் வளர்ப்போம்

வீட்டுக்கு வீடு மரம் வளர்த்து வீதி அனைத்தும் பசுமை செய்வோம். பூமியை நாம் குளிர்வித்து பூவுலகை நாம் காத்திடுவோம்.

சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கான வளவாளர் பயிற்சிப்பட்டறை

சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கான வளவாளர் பயிற்சிப்பட்டறை

தேசிய மொழிகள் மற்றும் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டமானது கனேடிய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் , தேசிய மொழி நிதியத்தினால்(NLF) முன்னெடுக்கப்படுகின்றது. இச்செயற்றிட்டம் தனுடைய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாக சமூகம் மொழி உரிமைகள் குறித்து விழிப்புணர்வைப் பெறுவதோடு, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி இரண்டாம் மொழியைக் கற்கவும் சமூக நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை முன்னேற்றுவதுமாகும். இச்செயற்றிட்டமானது இரண்டு வருட காலப்பகுதியைக்கொண்டது. அத்தோடு  சமூக மட்ட அமைப்புக்களையும், முன்பள்ளிஆசிரியர்களையும், இளைஞர் யுவதிகளையும் பிரதான மாற்று முகவர்களாக கொண்டு இச்செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சிப்பட்டறை நாள் 01 குறித்த வளவாளர் […]