ஆறுதல் நிறுவனத்தின் பிரதான பயனாளிகளும் பங்குபற்றுனர்களுமான முன்பள்ளிச் சமூகத்தினரின் வலுவூட்டல் செயற்பாடுகளில் பிறிதோர் பகுதியாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை ஆங்கில வகுப்புக்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளன. இவ் ஆங்கில வகுப்பானது சொலிடார் நிறுவனத்தின் அனுசரணையுடனும் கல்வி அமைச்சின் அனுமதியுடனும் நாடத்தப்பட்டன.குறித்த ஆங்கில வகுப்புக்களில் பங்குபற்றிய ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 27.03.2021 சனிக்கிழமை காலை 11 மணிக்கு வவுனியா வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பிள்ளைப்பராய அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் […]
