மொழி உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் பற்றிய வளவாளர் பயிற்சிகள்

ஆறுதல் நிறுவனம் முன்னெடுக்கும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டத்தின் ‘சமூக மட்ட அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கான’ மொழி உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் பற்றிய வளவாளர் பயிற்சிகள் கடந்த 24 .04.2021 ஆம் திகதி முதல் 27.04.2021 வரையும் வவுனியா தெற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றன.இவ் வளவாளர் பயிற்சி நிகழ்வில் வவுனியா தெற்கு , செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் 20 பேர் பயிலுனர்களாகக் கலந்து கொண்டனர்.

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பும், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்தலும்

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பும், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்தலும்

கல்வி மறுசீரமைப்புக்கான மக்களின் கருத்தக்களைக் கேட்டறிவதற்காக இணைய தளம் 26.03.2021 அன்று அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது, (https://egenuma.moe.gov.lk) இவ் இணையத் தளத்திற்கு அடுத்து வரும் மூன்று மாதங்களிற்குள் முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்புக்கள் குறித்து தனி நபர்களோ, அமைப்புகள் சார்பாகவோ கருத்துக்களை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டின் அறிவு அடிப்படையில் பொருளாதாரத்துக்கான மனித மூலதனம் உருவாக்கப்பட வேண்டுமென கல்வி மறுசீரமைப்புப் பரிந்துரைகள் எடுத்து இயம்புகின்றன. மனிதனை உச்ச அளவிற்கு விருத்தி செய்து கொடுக்கும் ஊடகமாகக் கல்வி உள்ளது, இதன்படி எமது ஆறுதல் நிறுவனம் சமூக ஆர்வலர்களையும் […]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான  அடிப்படை ஆங்கிலம் வகுப்புக்களுக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை ஆங்கிலம் வகுப்புக்களுக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு

ஆறுதல் நிறுவனத்தின் பிரதான பயனாளிகளும் பங்குபற்றுனர்களுமான முன்பள்ளிச் சமூகத்தினரின் வலுவூட்டல் செயற்பாடுகளில் பிறிதோர் பகுதியாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை ஆங்கில வகுப்புக்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளன. இவ் ஆங்கில வகுப்பானது சொலிடார் நிறுவனத்தின் அனுசரணையுடனும் கல்வி அமைச்சின் அனுமதியுடனும் நாடத்தப்பட்டன.குறித்த ஆங்கில வகுப்புக்களில் பங்குபற்றிய ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 27.03.2021 சனிக்கிழமை காலை 11 மணிக்கு வவுனியா வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பிள்ளைப்பராய அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் […]