News
இலங்கையின் கல்வி மறுசீரமைப்பும், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்தலும்

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பும், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்தலும்

கல்வி மறுசீரமைப்புக்கான மக்களின் கருத்தக்களைக் கேட்டறிவதற்காக இணைய தளம் 26.03.2021 அன்று அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது, (https://egenuma.moe.gov.lk) இவ் இணையத் தளத்திற்கு அடுத்து வரும் மூன்று மாதங்களிற்குள் முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்புக்கள் குறித்து தனி நபர்களோ, அமைப்புகள் சார்பாகவோ கருத்துக்களை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

21ம் நூற்றாண்டின் அறிவு அடிப்படையில் பொருளாதாரத்துக்கான மனித மூலதனம் உருவாக்கப்பட வேண்டுமென கல்வி மறுசீரமைப்புப் பரிந்துரைகள் எடுத்து இயம்புகின்றன. மனிதனை உச்ச அளவிற்கு விருத்தி செய்து கொடுக்கும் ஊடகமாகக் கல்வி உள்ளது, இதன்படி எமது ஆறுதல் நிறுவனம் சமூக ஆர்வலர்களையும் கல்வியலாளர்களையும் புத்தி ஜீவிகளையும் இணைத்துப் புதிய கல்விச் சீர் திருத்தத்திற்கு வலுச் சேர்க்கும் அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்தவுள்ளது.

2023ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விச் சீர்திருத்தத்தில் அரச பரிந்துரைகளை வாசித்து குறித்த விடயம் சார்பாக தங்களுடைய வாண்மையான அபிப்பிராயங்களை எமக்குத் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

zoom செயலி மூலம் ஒரு பொதுச் சமர்ப்பிப்பும் கலந்துரையாடலுக்குமான ஆயத்தங்களையும் மேற்கொள்வதுடன் தங்களின் மேற்படி தலைப்புச் சார்பாக எழுத்து மூல ஆவணத்தையும் சமர்ப்பித்து உதவவும். தங்களின் மேலான ஒத்துழைப்பிற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.