வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான எம் உறவுகளுக்கு உதவுவோம்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு உலர்உணவுகள், உடைகள், மருந்துப் பொருட்கள், படுக்கை விரிப்புகள், என்பவற்றை முடிந்த அளவு சேகரித்து வழங்கும் வண்ணம் வடமாகாண கௌரவ ஆளுனர் ரெஜினோல்ட் குரே அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைவாக  25.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று இவற்றை ஆறுதல் நிறுவனத்தினர் கண்டாவளை பதில் பிரதேச செயலாளர், திரு.ரி.பிருந்தாகரன் அவர்களிடமும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எம்.பிரதீபன் அவர்களிடமும் கையளித்தனர்.

புதுக்குடியிருப்பு செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் கலந்து கொண்டு கௌரவித்தார். அவ்வேளையில் தற்போது அப்பகுதி மக்களுக்குப் பின்வரும் பொருட்கள் தேவைப்படுகின்றன எனப் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனவே உதவி செய்யும் அன்புள்ளங்கள் இவற்றைக் கருத்திற் கொண்டு முடிந்த அளவு பொருட்களைத் தந்துதவுமாறு ஆறுதல் நிறுவனம் கேட்டுக் கொள்ளுகிறது.

தேவையான பொருட்கள்

1              நுளம்பு வலை                     –               914

2              தறப்பாள்                              –               485

 3             நிலவிரிப்பு                           –               515

4              தும்புத்தடி                            –               7100

5              விளக்குமாறு                       –               7100

6              டெட்ரோல்                            –               2500

 

தொலைபேசி இல          –           021 221 7092

தொலை நகல்                   –           021 221 7092

மின்னஞ்சல்                       –            aaruthaltrinco@gmail.com       

இணையம்                          –            www.aaruthal.lk

Comments are closed.