செய்திகள்
முன்பள்ளிச் சிறார்களின் பொங்கல் விழா
கோண்டாவில் Blossoms முன்பள்ளியின் பொங்கல் விழா 18.01.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00மணியளவில் முன்பள்ளி முன்றலில் நடைபெற்றது.
ஆறுதல் நிறுவன ஆலோசகர் திரு.சி.மாதவகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து இந்நிகழ்வைச் சிறப்பித்தனர். முன்பள்ளி ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்விற்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கி இருந்தனர்.
இவ்விழாவிற்கு பிள்ளைகள் கலாசார உடையணிந்து வருகை தந்திருந்தனர். இக் கொண்டாட்டத்தின் மூலம் சிறுவர், பொங்கல் விழா சூரியனுக்கு நன்றி செலுத்தும் விழா என்பதையும் பொங்கல்விழா கொண்டாடப்படும்நடைமுறை ஒழுங்குகளையும் கற்றுக் கொண்டனர்.
விழாவின் சில காட்சிகள்
aaruthal
0