செய்திகள்
ஆறுதல் நிறுவனத்தின் ஒளிவிழா கொண்டாட்டம்

ஆறுதல் நிறுவனத்தின் ஒளிவிழா கொண்டாட்டம்

 

ஆறுதல் நிறுவனத்தின் ஒளிவிழா கொண்டாட்டம் 20.12.2018 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் ஆறுதல் நிறுவனத்தின் பிரதான மண்டபத்திலே நடைபெற்றது.

ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அருட்தந்தை பிலிப் ரஞ்சனகுமார் அவர்கள் கலந்து கொண்டு இறை ஆராதனையையும் ஆசிச் செய்தியையும் வழங்கினார். 

“இன்று மகிழ்ச்சியான நாள். இரக்கம் காட்டுவதற்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் எதிரிகளை மறந்து சகோதரத்துவத்தை தாங்குவதற்கும் இயேசு கிறிஸ்து நம் மத்தியில் பிறந்தார். சமூகம்,மதம்,மொழி மற்றும் கலாச்சாரம் ஆகிய பாகுபாடு இல்லாமல் எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து பாசம்,அமைதி ஆகியவற்றில்  மகிழ்ச்சியடையவும் குழந்தை ஆண்டவர் வந்துதித்தார்.

அமைதி இழந்து சோகங்களோடும் வேதனைகளோடும்  துயரங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மவர்க்கு பாலகன் இயேசுவின் பிறப்பு  மகிழ்ச்சியை தரட்டும், அன்பை வளர்க்கட்டும், எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றட்டும்.  அன்பிலும் பண்பிலும் இணைந்திட சகோதரத்துவத்துவத்தில் ஒன்றிணைவோமாக.”  என்று அருட்தந்தை பிலிப் ரஞ்சனகுமார் தனது உரையில் குறிப்பிட்டார்.

விழாவின் தலைவர் திரு.சுந்தரம் டிவகலாலா தனது உரையில்  “ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மத விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. இன்று நாம் ஒளிவிழாவை சிறப்பாக கொண்டாடுகின்றோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைத்தும் மகிழ்ச்சியாகவும், சமாதானமாகவும் வாழ வழிவகுக்கும்” எனக் கூறினார். 

இதனைத் தொடர்ந்து நிறுவன உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பாக பிரதம விருந்தினரால் நத்தார் நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.