யுத்தப் பாதிப்புக்குள்ளான சமூகத்தை ஆற்றுப்படுத்தும் “ஆறுதல்”

“மாற்றமுறும் உலகின் அறைகூவல்களுக்கு முகம் கொடுக்கவல்ல உள நலமும், உடல் நலமும் கொண்ட ஒரு சமூதாயம்” என்ற தூர நோக்கோடு செயலாற்றிவரும் ஆறுதல் நிறுவனத்தின் செயற்பாடுகள் கடந்துபோன மூன்று தசாப்த யுத்தத்தினால் கல்வி, கலை, கலாசார, பொருளாதார நிலைகளில் அதளபாதாளத்தில் வீழ்ந்து மீள் எழுச்சிக்காக ஏங்கும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் காயங்களை ஆற்றுப்படுத்தும் சமூக நலத்திட்டங்களில் ஈடுபட்டுவரும் உன்னதமான சேவையினை ஆற்றிவருகின்றது.

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு பரிமாணங்களில் தனது சேவையினை ஆற்றிவரும் ஆறுதல் நிறுவனத்தின் பணிகள் சமூகத்தின் பாற்பட்டவை.

கல்விச் சேவை

மூன்று தசாப்த யுத்தத்தால் இழந்துபோன தமிழ் இனத்தின் கல்விப்புலத்தை அழிவில் இருந்து மீட்டெடுத்து ஓர் கல்விகற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கோடு முன்பள்ளி கல்வி அபிவிருத்தி, பாடசாலை கல்வி அபிவிருத்தி எனும் இரண்டு பாதைகளில் கல்விச் சேவையினை ஆறுதல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

முன்பள்ளி கல்வி அபிவிருத்தி நோக்கிய செயற்றிட்டங்களில் முன்பள்ளி மாணவார்களின் மன உள விருத்திச் செயற்பாடுகள் மகிழ்வித்தல் செயற்பாடுகள் ஊடாக அடிப்படைக் கல்வி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் முன்பள்ளி மாணவர்களின் போசாக்கு மட்டம் தொடர்பிலான செயற்றிட்டங்களும் முக்கியத்துவம் பெறுகின்றது.

மேலும் முன்பள்ளி மாணவர்கள் கல்வி கற்கும் மகிழ்ச்சிகரமான அக புறச் சூழல்களை உருவாக்குதல் முன்பள்ளி மாணவர்களின் பெற்றாகள் மத்தியில் சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஏற்படுத்துதல் சுகாதார விழிப்புணர்வுச் செயற்பாடுகள் ஊடாகவும் பிள்ளைகளில் உடல் உள நலன்பேணும் செயற்றிட்டங்களிலும் ஆறுதல் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயலாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போர்க்காலச் சூழ்நிலைகளால் சிதைந்துபோன தமிழ் இனத்தின் எதிர்கால சந்ததிகளை எதிர்காலத்தில் ஆளுமை மிக்கவார்களாக கட்யெழுப்புவதன் அவசியம் குறித்து ஆறுதல் நிறுவனத்தின் ஆரம்பகட்ட ஆழமான செயற்றிட்டமே முன்பள்ளிச் சிறார்களின் ஆரம்பக் கல்வி மீதான உன்னதமான சேவை முன்னெடுப்புக்கள் எனலாம்.

இவ்வாறு சிறப்பான எதிர்கால சந்ததிகளை கட்டியெழுப்புவதற்கான செயற்றிட்டத்தில் முன்பள்ளி சிறார்களை ஆளுமை மிக்கவர்களாகக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பு முன்பள்ளி ஆசிரியர்களின் கைகளிலேயே உள்ளது.

இதனை உணர்ந்து ஆறுதல் நிறுவனம் சிறுவர் அபிவிருத்திக்கு மேலாக முன்பள்ளி ஆசிரியர்கள் திறன்விருத்தி, ஆளுமைவிருத்தி என்பவற்றை கட்டியெழுப்பும் நோக்கோடு வடக்கு, கிழக்கு மற்றும் நாடுதழுவிய ரீதியில் முன்பள்ளி ஆசிரியர் டிப்ளோமா பயிற்சி நெறிகளை ஆரம்பித்து சிறுவரி கல்வி அபிவிருத்தி தொடர்பிலான ஆளுமைமிக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்றப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் ஊடாக சிறந்ததொரு சிறுவர் கல்வி அபிவிருத்தித் தளம் கட்டியெழுப்பப்படுகின்றமை சிறப்பானதாகும்.

DSC_0323

இதனூடாக எதிர்காலத்தில் ஆரோக்கியமான சந்ததிகள் உருவாக்கப்படுவதற்கான ஊன்றுகோலாக ஆறுதல் நிறுவனத்தின் செயற்பாடுகள் மிளிர்கின்றன.

மேலும் பாடசாலைக் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக தரம் 5 புலமைப்
பரிசில் பரீட்சை மாணவர் முதல் கா.பொ.த சாதாரண தரம் மற்றும் கா.பொ.த உயர்; தரம் வரையான மாணவர்களுக்கான கற்றல் ஊக்கிகளை வெளியீடு செய்து
வடக்கு கிழக்கு பாடசாலைகளுக்கு விநியோகித்து அதனூடாக பரீட்சைகளை மாணவர்கள் திறனுடன் எதிர்நோக்கும் சூழலை ஏற்படுத்திவருகின்றது.

photo (2)

இவற்றுக்கு மேலாக பாரீட்சை காலங்களை ஒட்டி தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, கா.பொ.த சாதாரண தரம், கா.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை வழிகாட்டிக் கருத்தரங்குகளை வடக்கு கிழக்கின் சிறந்த வளவாளர்களை கொண்ட கல்விக்குழு மூலம் நடத்திவருவதனூடாக மாணவர்களின் கல்விப் பெறுபேறுகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றமை கல்விப் புலத்தில் ஆறுதலின் பணிகள் பெரு வரவேற்பைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

DSC_4069

உளவியல் சமூக மேம்பாடு

ஆறுதல் நிறுவனத்தின் உளவியல் சார் சமூக மேம்பாட்டுச் செயற்பாடுகள் காலத்தின் தேவையூணர்ந்து செயற்படுத்தப்பட்டுவருகின்றமை கண்கூடு. மூன்று தசாப்த போர் தந்த வலிகளும் தாக்கங்களும் தமிழ் மக்களின் வாழ்வியலில் ஏற்படுத்திய இழப்புக்கள் சொல்லிமாளாதவை.

யுத்தம் ஓய்ந்து இயல்புநிலை தோற்றுவிக்கப்பட்டதான தோற்றப்பாடுகள் நிலவினாலும் இழப்புக்களின் தாக்கம் மறைந்துபோக இன்னும் பல தசாப்தங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

hh

கட்டியெழுப்பவேண்டியதன் அவசியம் உணர்ந்து உளவியல் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக சிறுவர்கள் பெரியவர்கள் என இரு பகுதிகளாக உளவியல் சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருகின்றமை ஆறுதல் நிறுவனத்தின் சமூகச் செயற்பாடுகளில் முதன்மையானது.

545

ஆறுதல் நிறுவனம் சூழல் பாதுகாப்பு திட்டங்களை முன்னிலைப்படுத்தி பல செயற்றிட்டங்களை மேற்கொண்டுவருகின்றமையைக் காணமுடிகின்றது. வடமராட்சி கிழக்கில் அழிந்துசெல்லும் சவுக்கம் காட்டினை பாதுகாப்பதற்கான திட்ட முன்னெடுப்புக்களில் பல நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றமை பல சமூக அமைப்புக்களின் பாராட்டைப் பெற்ற செயற்றிட்டமாக விளங்குகின்றது.

_MG_1016 (1)

சமூகச் செயற்பாடுகள்

ஆறுதல் நிறுவனத்தின் ஊடாக பல்வேறுபட்ட சமூகச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் வறுமை ஒழிப்பு, ஆளுமை விருத்தி செயலமர்வுகள், கலை கலாசார பண்பாட்டு வளர்ச்சிப் பணிகள், வாழ்வாதார உதவி திட்டங்கள், சிறுவர் பெண்கள் உரிமைகள், பாதுகாப்பு செயற்றிட்டங்கள், மனித வள மேம்பாட்டுச் செயற்றிட்டங்கள், விழிப்புணர்வுச் செயற்றிட்டங்கள், சூழல் பாதுகாப்பு செயற்றிட்டங்கள் எனப் பல்வேறுபட்ட சமூக சேவைகளில் ஆறுதல் நிறுவனம் ஈடுபட்டுவருகின்றது.

DSCN9206

தமிழ் மக்களின் விடிவு நோக்கிய மீள் எழுச்சிப் பயணத்தில் ஆறுதல் நிறுவனத்தின் செயற்பாடுகள் மிகச் சிறப்பான சமூக விருத்தி நோக்கியதாக காணப்படுகின்றது. இவை எதிர்காலத்தில் ஆரோக்கியமான தமிழர் சமூகம் கட்டியெழுப்புவதற்கு உறுதுணையாகவுள்ளதுடன் “வடலிகள் வானுயரும்” என்ற ஆறுதல் நிறுவனத்தின் இலக்கும் ஈடேறும்.