முன் பிள்ளைப்பராய விருத்திக்காக ஒன்றிணைவோம்

எமது நிறுவனம் கல்வி அமைச்சின் அனுமதியுடன் சொலிடார் நிறுவனத்துடன் இணைந்து “முன் பிள்ளைப்பராய விருத்திக்காக ஒன்றிணைவோம்”என்ற செயற்றிட்டத்தின் மூலம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அவர்களின் தகைமை சார்ந்ததும், சமூகம் சார்ந்ததுமான திறன்களை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட்டு வருகிறது.. இச்செயற்றிட்டத்தின் ஊடாக வெள்ளம், கொவிட் 19 போன்றவற்றால் பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உணவுப்பொதியொன்றை வழங்குவதற்கு எமக்கு நிதிவழங்கும் நிறுவனம் தீர்மானித்திருந்ததுடன் அதற்காக ஏழு வலயங்களில் இருந்து ஆசிரியர் விபரங்களை கல்வி அமைச்சின் ஊடாகப் பெற்றிருந்தோம். அதற்கமைய குறித்த உணவுப்பொதிகளுக்குரிய ரூ.2000 பெறுமதியான கூப்பன்களை கையளிக்கும் நிகழ்வு கடந்த 09.01.2021 அன்று ஆறுதல் நிறுவனத்தில் நடைபெற்றது. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக செல்வி ஜெயா தம்பையா (பணிப்பாளர் ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்தி, மாகாணக் கல்வித் திணைக்களம் வடமாகாணம்)அவர்களும் மற்றும் விருந்தினர்களாக முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர்களும். வலய இணைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.