தென்மராட்சி, தீவக வலயங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை

ஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம் என்ற செயற்திட்டத்தின் கீழ், ஆறுதல் நிறுவனம் சொலிடார் நிறுவனத்தின் உதவியோடு மேற்கொள்ளும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை கடந்த மார்ச் 8, 9 ஆம் திகதிகளில் தென்மராட்சி, தீவக வலயங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆறுதல் செயற்திட்ட அலுவலகத்தில் வழஙகப்பட்டது.

பயிற்றுவிப்பாளர் பயிற்சி மூலம் வளவாளர்களாக
குறித்த வலயங்களில் இருந்து பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களால் இரு வலயங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட இருபது ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான இப்பயிற்சிப் பட்டறையில் சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவர் பாதுகாப்பு, முதலான தலைப்புக்களின் கீழ் சிறார்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவற்றைத் தவிர்ப்பதற்கான பொறிமுறைகள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் முதலானவர்களின் பங்குபற்றல் முதலான விடயங்கள் பல்வேறு செயற்பாடுகள், அறிவூட்டல் முறைமைகளின் ஊடாக வழங்கப்பட்டன.