திசைமுகப்படுத்தல் நிகழ்வு

2021 ம் ஆண்டிற்கான முன்பள்ளிக் கல்வி டிப்ளோமாக் கற்கை நெறியின் திசைமுகப்படுத்தல் நிகழ்வானது கடந்த 27.02.2021, 28.02.2021 ஆகிய தினங்களில் வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு, மற்றும் மடு ஆகிய வலயங்களில் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் வடமாகாண முன்பள்ளிக் கல்வி அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா, வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் , நிலைய இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்… மேற்படி கற்கை நெறியை வவுனியா தெற்கு வலயத்தில் 44 ஆசிரியர்களும், வவுனியா வடக்கு வலயத்தில் 36 ஆசிரியர்களும், மடு வலயத்தில் 49 ஆசிரியர்களும் தொடரவுள்ளனர்.