வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மகளிர் தின வாழ்த்து

இன்று (மார்ச்-08) கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வடலிகளை வானுயர்த்தும் பணியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் அதன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

தாய்மை உணர்வுடன் சிறார்களை அரவணைத்து, அவர்களுக்கான மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்கள் நாளைய சமூகத்தில் பலம் மிக்கவர்களாக உருவாக அத்திவாரமிடும் உன்னதமான பணியை மேற்கொள்ளும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும், அந்த ஆசிரியர்களுடன் சிறந்த உறவைப் பேணும் தாய்மாருக்கும் இந்த மகளிர் தினத்தில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.