ஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம்- மாதாந்த கலந்துரையாடல்

ஆறுதல் நிறுவனம் சொலிடார் நிறுவனத்தின் உதவியோடு
மேற்கொள்ளும் ஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம் என்ற செயற்திட்டத்தின் கீழ், முன்பள்ளி ஆசிரியர் சங்கங்களுக்கான மாதாந்த கலந்துரையாடல்
தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் வவுனியா வடக்கு, தெற்கு ஆகிய வலயங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கலந்துரையாடல் மார்ச் 10 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் முன்பள்ளி ஆரியர்கள்
எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், தேவைகள் பற்றியும், அவர்கள் ஒன்றாக இணைந்து மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை, நிரந்த வேலைவாய்ப்பு தொடர்பான விடயங்களும், பிள்ளைகள் தொடர்பான பிரச்சினைகளும் முக்கியமாக
கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.