வாழ்த்துச் செய்தி

தற்கால கொரோனா சூழ்நிலையிலும் சுகாதார நடைமுறைகளைக் கடைப் பிடித்து நாளை (12.10.2020) இலிருந்து நடைபெற இருக்கின்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு ஆறுதல் நிறுவனத்தின் வாழ்த்துக்களும் ஆசிகளும்… Aaruthal wishes and blesses the students who will be sitting for the GCE Advanced Level Examination from the 12th October, despite the COVID 19 situation , following all the safety measures.

Grade Five scholarship Exam

✍️👍தற்கால கொரோனா சூழ்நிலையிலும் நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு ஆறுதல் நிறுவனத்தின் வாழ்த்துக்கள்!!! Best wishes from aaruthal organisation for all the Grade 5 students who are sitting for the Scholarship Examination tomorrow, (11th October) despite the COVID 19 situation.

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”

அறிவென்னும் விளக்கேற்றிஅன்பெனும் வழிகாட்டிசந்தனத் தென்றலாய் வலம் வந்து குளிர்சந்திரனின் தன்மையைக் கொண்டுகனியமுத மொழியோடுகல்விதனைப் போதிக்கும்எம் மரியாதைக்குரிய ஆசிரியர்களிற்குஇனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.

பட்டதாரிப் பயிலுனர்களின் முகாமைத்துவப் பயிற்சி – முதலாம் தொகுதி

பட்டதாரி பயிலுநர்களுக்கான முகாமைத்துவ பயிற்சி- 14.09.2020 – 18.09.2020 அரசாங்கத்தினால் தற்பொழுது நியமனம் பெற்றுள்ள பட்டதாரிப் பயிலுநர்களுக்கான முகாமைத்துவப் பயிற்சிகள் ஆறுதல் நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன.அதில் முதலாவது தொகுதியில் 30 பட்டதாரிகளுக்கான முகாமைத்துவப் பயிற்சிகடந்த 14 ஆம் திகதி தொடககம் 18 ஆம் திகதி வரை ஆறுதல் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. ஆறுதலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களின் தலைமையில், ந.அனந்தராஜ், எஸ். மாதவகுமார், எஸ்.சுகுமார், விவேக், ஜெயவாணி, கு.பிரதீப், முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவி, செயலாளர், ஆகியோர் வளவாளர்களாகச் […]

மூன்றாம் தொகுதி முன்பள்ளி ஆசிரியர்களிற்கான நட்புதவியாளர் பயிற்சி-வடமராட்சி வலயம்

ஆறுதல் நிறுவனம் வடமராட்சி வலயத்தைச் சேர்ந்த 26 முன்பள்ளி ஆசிரியர்களிற்கு நட்புதவியாளர் பயிற்சியை வடமராட்சி வலயக்கல்வி அலுவலகத்தில் 28.08.2020 தொடக்கம் 01.09.2020 வரை நடாத்தியுள்ளது. இன்று அவ் ஆசிரியர்களிற்கான களத்தரிப்புப் பற்றிய கலந்துரையாடல் உளவளத் துணையாளர்களான திரு.ச.கருணாகரன், திருமதி.சு.சிவமலர், திரு.ச.கிருபானந்தன், திரு.வே.சசிகுமார் ஆகியோரின் உதவியுடன் நடைபெற்றது.

பரீட்சைகள் நிறைவடைந்துள்ளன

ஆறுதல் நிறுவனத்தின் 2018/2019 கல்வியாண்டின் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமாக் கற்கை நெறியின் இரண்டாம் பருவப் பரீட்சைகள் இன்று நிறைவடைந்துள்ளன. இப் பரீட்சை முடிவுகள் நவம்பர் மாத முற்பகுதியில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

2018/2019 கல்வியாண்டின் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமாக் கற்கை நெறியின் இரண்டாம் பருவப் பரீட்சைகள்

இக் கல்வியாண்டின் இரண்டாம் பருவப் பரீட்சைகள் கடந்த 5,6 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் 1 , யாழ்ப்பாணம் 2, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, கிளிநொச்சி, முல்லைத்தீவு ,வவுனியா தெற்கு ஆகிய நிலையங்களில் ஆரம்பித்தன. அடுத்த கட்டப் பரீட்சைகள் எதிர்வரும் 12,13 ஆகிய தினங்களில் நடைபெறும்.

விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எமது நிறுவனத்திற்கு செயற்றிட்ட முன்மொழிவு எழுதுதல் மற்றும் அறிக்கை எழுதலில் மிகுந்த அனுபவம் உள்ளவர்கள் தேவை. எமது பணியாளர்களிற்கு அவை குறித்த பயிற்சி வழங்கவும் வேண்டும். தகுதியானவர்கள் அனுபவச் சான்றுகளுடன் விண்ணப்பிக்கவும்.

இரண்டாம் தொகுதி நட்புதவியாளர் பயிற்சி- வலிகாமம்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் பயிற்சி ஆறுதல் நிறுவனத்தினால் இரண்டாம் தொகுதியினருக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆறுதல் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பாக தனது வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான டிப்ளோமா பயிற்சி மற்றும் மாதிரி முன்பள்ளிகளை நடாத்துதல் போன்ற வேலைத்திட்டங்களையும் செய்து வருகின்றது. கொவிட்-19 சர்வதேச பரவல் காரணமாக இலங்கையிலுள்ள முன்பள்ளிகளிலும் அதன் தாக்கம் இல்லாமல் இல்லை. முக்கியமாக முன்பள்ளி பிள்ளைகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களும் இதன் பாதிப்பை எதிர்நோக்குகின்றார்கள். பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிப்பதைத் தொடர்ந்து […]