முன்பள்ளி ஆசிரியர்களின் விளையாட்டு நிகழ்வு

முன்பள்ளி ஆசிரியர்களின் விளையாட்டு நிகழ்வு

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் தொழிற்சங்கத்தினால் நடாத்தப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வு 26.01.2019 அன்று காலை 9.00 மணியளவில் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதாம நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளை அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா அவர்கள் கலந்து சிறப்பித்தார். ஏற்கனவே கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வு சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டு  அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் 26ஆம் திகதி நடைபெற்றன. இதில் முன்பள்ளி […]

முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு  – 2018/2019         (கிளிநொச்சி, முல்லைத்தீவு)

முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – 2018/2019 (கிளிநொச்சி, முல்லைத்தீவு)

மேற்படி முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறியில் பயிலவுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 02.00மணியளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண  கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி.ஜெயா தம்பையா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.  ஆறுதல் நிறுவன நிபுணத்துவ ஆலோசகர் திரு.சி.மாதவகுமாரன் அவர்களும், வளவாளர்களும், முல்லைத்தீவு வலய உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு வலய இணைப்பாளர்களும் பயிற்சி பெறவுள்ள கிளிநொச்சி வலய முன்பள்ளி  […]

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – யாழ்ப்பாணம்

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – யாழ்ப்பாணம்

2018/2019 கல்வி ஆண்டிற்கான டிப்ளோமா கற்கை நெறியை பயிலவுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு 19-01-2019 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் நல்லூர், நாவலர் வீதியில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் முற்பகல் 10.00மணியளவில் ஆரம்பமாகியது.  ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கொழும்பு மாவட்ட றொட்டறிக்கழக முன்னாள் மாவட்ட ஆளுநர், திரு.தர்சன்ஜோன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கொழும்பு கிழக்கு  றொட்டறிக் கழகத்தின் தலைவர் திரு.சம்பத் பெரேரா அவர்களும் வடமாகாண ஆரம்பபிள்ளைப் பருவ அபிவிருத்திப்பிரிவு பணிப்பாளர் செல்வி.ஜெயா […]

முன்பள்ளிச் சிறார்களின் பொங்கல் விழா

முன்பள்ளிச் சிறார்களின் பொங்கல் விழா

கோண்டாவில் Blossoms முன்பள்ளியின் பொங்கல் விழா 18.01.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00மணியளவில் முன்பள்ளி முன்றலில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவன ஆலோசகர் திரு.சி.மாதவகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து இந்நிகழ்வைச் சிறப்பித்தனர். முன்பள்ளி ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்விற்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கி இருந்தனர். இவ்விழாவிற்கு பிள்ளைகள் கலாசார உடையணிந்து வருகை தந்திருந்தனர். இக் கொண்டாட்டத்தின் மூலம் சிறுவர், பொங்கல் விழா சூரியனுக்கு நன்றி செலுத்தும் விழா என்பதையும் பொங்கல்விழா கொண்டாடப்படும்நடைமுறை ஒழுங்குகளையும் கற்றுக் கொண்டனர். விழாவின் சில […]

சிறுவர் நட்புறவுப் பூங்கா

சிறுவர் நட்புறவுப் பூங்கா

ஆறுதல் நிறுவனத்தினால் நடாத்தப்படும் சிறுவர் நட்புறவுப் பூங்கா செயற்றிட்டத்தின் கீழ் நடைபெறும் மாலை நேர வகுப்புக்களை இச் செயற்றிட்டத்திற்கு நிதி வழங்குனர்களில் ஒருவரான திருமதி.தியாகேஸ்வரி மகேந்திரன் அவர்கள் 2019.01.14 ஆம் திகதி பி.ப 3.30 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டார்.  இங்கு மாணவர்கள் தமது கற்றல் மற்றும் இணைபாடவிதானச் செயற்பாடுகளான ஆடல், பாடல், கவிதை, பேச்சு, ஆங்கிலக் கவிதை, பொதுஅறிவுத் துணுக்குகள் ஆகியவற்றின் மூலம் தமது தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தினர். அவற்றை நேரில் பார்த்து மகிழ்ந்ததுடன் அவர்களை தனது அறிவுரை மூலம் உற்சாகப்படுத்தி தொடர்ந்து இத்திட்டத்தை […]

துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

ஆறுதல் நிறுவனத்தினுடாக 30.11.2018 அன்று MIOT அமைப்பின் நிதி அனுசரணையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. ஆறுதல் செயற்றிட்டத்தின் ஒரு கிராமமாக விளங்கும் உயரப்புலத்தில், முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட, கீழே குறிக்கப்பட்டுள்ள தேவை கருதிய 23 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. யா/பண்டத்தரிப்பு ஜசிந்தா றோ.க.த.க பாடசாலை        – 13 மாணவர்கள் யா/பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை         – 05 மாணவர்கள் யா/இளவாளை ஹென்றி அரசர் கல்லூரி        […]

‘‘உயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா”- மாலை நேர வகுப்புக்கள்

‘‘உயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா”- மாலை நேர வகுப்புக்கள்

  ஆறுதல் நிறுவனத்தினால் 2017.09.30 ஆம் திகதியன்று இளவாலை உயரப்புலத்தில் ‘‘சிறுவர் நட்புறவுப் பூங்கா” என்னும் செயற்றிட்டத்தின் கீழ், தரம் 1 தொடக்கம் தரம் 6 வரையான பாடசாலை மாணவர்களுக்கு மாலை நேரக்கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. 2019.01.08 அன்று அத்திட்டத்திற்கு நிதி வழங்குனர்களில் ஒருவரான திருமதி.தியாகேஸ்வரி மகேந்திரன் அவர்களுடன் ஆறுதல் நிறுவனப்பணிப்பாளர், நிபுணத்துவ ஆலோசகர் மற்றும் செயற்றிட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்துரையாடினர்.  அக் கலந்துரையாடலின்போது எதிர்காலத்தில் எவ்வாறான பங்களிப்பினை இம் மாணவர்களின் கற்றல் மேம்பாட்டுக்கு வழங்க முடியும் என்பது தொடர்பாகவும் செயற்றிட்டத்தின் வளர்ச்சி, தற்போதைய […]

‘‘இலங்கையில் முன்பள்ளி பராய விருத்திக்காக ஒன்றிணைவோம்”  செயற்றிட்ட தொடக்கவிழா

‘‘இலங்கையில் முன்பள்ளி பராய விருத்திக்காக ஒன்றிணைவோம்” செயற்றிட்ட தொடக்கவிழா

  ஆறுதல் நிறுவனமானது 2021 ஆம் ஆண்டினை எதிர்நோக்கி  ” எனும் செயற்றிட்டத்தில் 18.12.2018 இல் இணைந்துள்ளமை சிறப்பான ஒரு தருணமாகும். SLIDA சர்வதேச இயக்குனர், Solidarite Laique நிறுவன தேசிய இயக்குனர், AFD நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிறுவனங்களின் பங்குதாரர்களாலும் இச்செயற்றிட்டத்தின் தொடக்கவிழா கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாலைதீவுக்கான பிரெஞ்சு தூதுவர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். ஆறுதலின் தலைமை நிர்வாகி திரு.சுந்தரம் டிவகலாலா இந்நிகழ்வில் ஆறுதல் செயற்றிட்ட அலுவலர்களுடன் கலந்து கொண்டார்.  இது நம்பிக்கை தரும் நிகழ்வென்பதுடன் ஆறுதல் நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒரு […]

ஆறுதல் நிறுவனத்தின் ஒளிவிழா கொண்டாட்டம்

ஆறுதல் நிறுவனத்தின் ஒளிவிழா கொண்டாட்டம்

  ஆறுதல் நிறுவனத்தின் ஒளிவிழா கொண்டாட்டம் 20.12.2018 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் ஆறுதல் நிறுவனத்தின் பிரதான மண்டபத்திலே நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அருட்தந்தை பிலிப் ரஞ்சனகுமார் அவர்கள் கலந்து கொண்டு இறை ஆராதனையையும் ஆசிச் செய்தியையும் வழங்கினார்.  “இன்று மகிழ்ச்சியான நாள். இரக்கம் காட்டுவதற்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் எதிரிகளை மறந்து சகோதரத்துவத்தை தாங்குவதற்கும் இயேசு கிறிஸ்து நம் மத்தியில் பிறந்தார். சமூகம்,மதம்,மொழி மற்றும் கலாச்சாரம் ஆகிய பாகுபாடு […]

ஆறுதல் நிறுவனத்தின் 11வது ஆண்டு பொதுக்கூட்டம்

ஆறுதல் நிறுவனத்தின் 11வது ஆண்டு பொதுக்கூட்டம்

ஆறுதல் நிறுவனத்தினுடைய பதினொராவது ஆண்டு பொதுக்கூட்டம் திரு.ராஜன் நைல்ஸ் தலைமையில் கடந்த 15-12-2018 அன்று ஆறுதல் அலுவலகத்தின் பிரதான மண்டபத்தில் காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா 2018ஆம் ஆண்டிற்கான ஆறுதல் நிறுவனத்தின் முன்னேற்றத் திட்டங்களை முன்வைத்தார். அத்தோடு நிதி முகாமைத்துவ பிரதிநிதியால் நிதி அறிக்கை முன்வைக்கப்பட்டது. இவை உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டிற்கான ஆறுதல் நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. ஆறுதல் நிறுவன நிர்வாக இயக்குனர்கள், பணிப்பாளர்கள் மற்றும் […]