கொரோனா தனிமைப்படுத்தல் நெருக்கடியான சூழ்நிலையில் உள ஆரோக்கியத்தைப் பேணுதல்

அவசரமாக இயங்கிக் கொண்டிருந்த உலகில், இன்று கொரோனா (Covid -19 ) தாக்கத்ததினால்; பெரும்பாலான நாடுகளில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். தற்பொழுது நாள் முழுக்க எல்லா விடயங்களிலும் கொரோனா பற்றிய பேச்சாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் நாங்கள், எங்களுடைய இந்த தனிமைப்படுத்தல் காலத்தை தற்போதும் பிற்காலத்திலும் ஆரோக்கியமானதாக ஆக்கிக்கொள்ளலாம் என்பதில் தெளிவு பெற்றிருத்தல் நன்மை பயக்கும். கொரோனா பரவுதலினால் அநேகமான நாடுகளில் கொரோனா தொற்றைத் தடுக்கும் முகமாக மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையானது பல்வேறு வழிகளில் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் இன்னல்களையும் […]

வீட்டுத் தோட்டம் அமைக்க முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘ஆறுதல்’ நிறுவனம் அழைப்பு!

முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் பணியை மேற்கொள்ளுமாறு ‘ஆறுதல்’ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் போசகருமான சுந்தரம் டிவகலாலா கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண கூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த செயற்பாட்டை மேற்கொள்ள முன்வருமாறும், அதற்கான வழிகாட்டலை ‘ஆறுதல்’ நிறுவனம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘ஆறுதல்’ நிறுவனம் வடக்கு கிழக்கில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ‘டிப்ளோமா’ பயிற்சி நெறியை வழங்கி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ‘ஆறுதல்’ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் […]

தென்மராட்சி, தீவக வலயங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை

ஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம் என்ற செயற்திட்டத்தின் கீழ், ஆறுதல் நிறுவனம் சொலிடார் நிறுவனத்தின் உதவியோடு மேற்கொள்ளும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை கடந்த மார்ச் 8, 9 ஆம் திகதிகளில் தென்மராட்சி, தீவக வலயங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆறுதல் செயற்திட்ட அலுவலகத்தில் வழஙகப்பட்டது. பயிற்றுவிப்பாளர் பயிற்சி மூலம் வளவாளர்களாக குறித்த வலயங்களில் இருந்து பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களால் இரு வலயங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட இருபது ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. சிறுவர் பாதுகாப்பு தொடர்பான இப்பயிற்சிப் […]

ஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம்- மாதாந்த கலந்துரையாடல்

ஆறுதல் நிறுவனம் சொலிடார் நிறுவனத்தின் உதவியோடு மேற்கொள்ளும் ஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம் என்ற செயற்திட்டத்தின் கீழ், முன்பள்ளி ஆசிரியர் சங்கங்களுக்கான மாதாந்த கலந்துரையாடல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் வவுனியா வடக்கு, தெற்கு ஆகிய வலயங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கலந்துரையாடல் மார்ச் 10 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் முன்பள்ளி ஆரியர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், தேவைகள் பற்றியும், அவர்கள் ஒன்றாக இணைந்து மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் […]

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மகளிர் தின வாழ்த்து

இன்று (மார்ச்-08) கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வடலிகளை வானுயர்த்தும் பணியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் அதன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது. தாய்மை உணர்வுடன் சிறார்களை அரவணைத்து, அவர்களுக்கான மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்கள் நாளைய சமூகத்தில் பலம் மிக்கவர்களாக உருவாக அத்திவாரமிடும் உன்னதமான பணியை மேற்கொள்ளும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும், அந்த ஆசிரியர்களுடன் சிறந்த உறவைப் பேணும் தாய்மாருக்கும் இந்த மகளிர் தினத்தில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக வட மாகாண […]

உயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா மாலை நேர வகுப்பு மாணவர்களின் விளையாட்டுவிழா– 2020

உயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா மாலை நேர வகுப்பு மாணவர்களின் விளையாட்டுவிழா– 2020 இந்த நிகழ்வு ஆறுதல் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த 29-02-2020 அன்று இடம்பெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் இந்நிகழ்விற்கு தலைமை வகித்தார். பிரதம விருந்தினராக திரு. அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், (தவிசாளர் வலி-தென்மேற்கு பிரதேச சபை) கௌரவ விருந்தினராக திரு. புவனேஸ்வரன் பிரகாஸ் (கிராம சேவகர் மாரீசன் கூடல்) ஆகியார் கலந்துகொண்டனர். மேலும், செல்வி ஜெயா தம்பையா (பணிப்பாளர் ஆரம்பப் பிள்ளை அபிவிருத்திப் பிரிவு- வடமாகாணம்) திரு வே. சகுந்தரராஜன் […]

Discussion about the solidarity programmes

The meeting was held in the Aaruthal office (22.02.2020) at 10.00am . we discussed about the solidarity programmes,TOT trainings that we organized with the solidarity and the higher diploma courses ,that we have.Also they briefed about the projects that they did so far.In the meeting our aaruthal CEO and  Project staff,  ADS from each zone were participated for it.

முன்பள்ளிக்கல்வி தொடர்பான கலந்துரையாடல்

முன்பள்ளிக்கல்வி தொடர்பான கலந்துரையாடல்

ஆறுதல் நிறுவனத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களின் வாண்மை விருத்தியைக் கருத்திற்கொண்டு வழங்கப்படும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறி தொடர்பான கலந்துரையாடல் 02.03.2019 சனிக்கிழமை மட்டக்களப்பிலும், 03.03.2019 ஞயிற்றுக்கிழமை திருகோணமலையிலும் நடைபெற்றது.  02.03.2019 அன்று மட்டக்களப்பு சர்வோதயம் மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு இணைப்பாளர் திரு.மு.புவிராஜ் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆறுதல் நிறுவன உறுப்பினர்களும் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, கல்முனை, திருக்கோவில் டிப்ளோமா கற்கைநெறி வலய இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திருகோணமலை சென்/பிரான்சிஸ் சேவியர் மகாவித்தியாலயத்தில் […]

வட மாகாண சிறுவர் மற்றும், நன்னடத்தை திணக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

வட மாகாண சிறுவர் மற்றும், நன்னடத்தை திணக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

UNICEF மற்றும் சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களத்துடன் ( Department of Probation & Childcare Service) ஆறுதல் நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி கையேடும் மகவேற்பு செய்யும் பெற்றோர்களுக்கான பயிற்சி கையேடும் தயாரிக்கும் பணியின் இறுதி முடிவுகள் எடுக்கும் கலந்துரையாடலானது வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களத்தில் 22.02.2019 அன்று நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திரு.T.விஸ்வரூபன்தலைமையில் நடைபெற்றது.  

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – வவுனியா தெற்கு

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – வவுனியா தெற்கு

  முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி 2018/2019  திசைமுகப்படுத்தல் நிகழ்வு 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00மணியளவில்  வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற வவுனியா தெற்கு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான  இந்நிகழ்வில், வடமாகாண  கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி.ஜெயா தம்பையா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.  ஆரம்பபிள்ளை அபிவருத்திப்பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கோ.தர்மபாலன் அவர்களும் மற்றும் ஆறுதல் நிறுவன நிபுணத்துவ ஆலோசகர் திரு.சி.மாதவகுமாரன் அவர்களும்  பயிற்சி பெறவுள்ள  52 […]