செய்திகள்
BLOSSOMS முன்பள்ளி சிறார்களின் கலைவிழா

BLOSSOMS முன்பள்ளி சிறார்களின் கலைவிழா

கோண்டாவில் மற்றும் அரியாலை BLOSSOMS முன்பள்ளி சிறார்களின் கலைவிழா கடந்த 08.12.2018 சனிக்கிழமை அன்று  வெகு விமரிசையாக  கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது.

ஆறுதல் நிறுவன  நிபுணத்துவ ஆலோசகரான திரு.சி.மாதவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்  வடமாகாண கல்வி அமைச்சின் ஆரம்பப்பிள்ளை அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி.ஜெயா தம்பையா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

மேலும் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். மற்றும், ஹற்றன் நசனல் வங்கி அலுவலர்களும் முன்பள்ளி சிறார்களும் ஆசிரியைகளும் பெற்றோரும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

இந் நிகழ்வில் எதிர் வரும் வருடத்தில் அரசாங்கப் பாடசாலைகளில் இணையவுள்ள முன்பள்ளி சிறார்களுக்கான விசேட பரிசில்கள் வழங்கப்பட்டதோடு,  அனைத்து முன்பள்ளிச் சிறார்களையும் வாழ்த்திப் பரிசில்கள் வழங்கப்பட்டன.