செய்திகள்
முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – வவுனியா தெற்கு

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – வவுனியா தெற்கு

 

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி 2018/2019  திசைமுகப்படுத்தல் நிகழ்வு 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00மணியளவில்  வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.

ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற வவுனியா தெற்கு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான  இந்நிகழ்வில், வடமாகாண  கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி.ஜெயா தம்பையா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். 

ஆரம்பபிள்ளை அபிவருத்திப்பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கோ.தர்மபாலன் அவர்களும் மற்றும் ஆறுதல் நிறுவன நிபுணத்துவ ஆலோசகர் திரு.சி.மாதவகுமாரன் அவர்களும்  பயிற்சி பெறவுள்ள  52 முன்பள்ளி  ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.