செய்திகள்
முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – யாழ்ப்பாணம்

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – யாழ்ப்பாணம்

2018/2019 கல்வி ஆண்டிற்கான டிப்ளோமா கற்கை நெறியை பயிலவுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு 19-01-2019 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் நல்லூர், நாவலர் வீதியில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் முற்பகல் 10.00மணியளவில் ஆரம்பமாகியது. 

ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கொழும்பு மாவட்ட றொட்டறிக்கழக முன்னாள் மாவட்ட ஆளுநர், திரு.தர்சன்ஜோன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கொழும்பு கிழக்கு  றொட்டறிக் கழகத்தின் தலைவர் திரு.சம்பத் பெரேரா அவர்களும் வடமாகாண ஆரம்பபிள்ளைப் பருவ அபிவிருத்திப்பிரிவு பணிப்பாளர் செல்வி.ஜெயா தம்பையா அவர்களும், ஆறுதல் நிறுவன டிப்ளோமா கற்கை நெறி இணைப்பாளர் யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் திரு.சு.மோகனதாஸ் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். 

அத்துடன் ஆரம்பப்பிள்ளைப் பருவ அபிவிருத்திப் பிரிவின் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நல்லூர், சுன்னாகம் றொட்டறிக் கழக உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி வலயங்களைச் சேர்ந்த டிப்ளோமா பயிலுநர் முன்பள்ளி ஆசிரியர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.