செய்திகள்
முன்பள்ளி ஆசிரியர்களின் விளையாட்டு நிகழ்வு

முன்பள்ளி ஆசிரியர்களின் விளையாட்டு நிகழ்வு

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் தொழிற்சங்கத்தினால் நடாத்தப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வு 26.01.2019 அன்று காலை 9.00 மணியளவில் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஆறுதல் நிறுவனத்தின் பிரதாம நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளை அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

ஏற்கனவே கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வு சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டு  அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் 26ஆம் திகதி நடைபெற்றன.

இதில் முன்பள்ளி ஆசிரியர்கள் வலைப்பந்தாட்டம், கிளித்தட்டு, கயிறு இழுத்தல், தேங்காய் துருவுதல் மற்றும் விநோதஉடை போன்ற தனி நிகழ்வு மற்றும் குழு நிகழ்வுகள் மூலம் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்வின் இறுதியில் விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற அணிகளிற்கு பிரதம விருந்தினரால் வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டது.