செய்திகள்
முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு  – 2018/2019         (கிளிநொச்சி, முல்லைத்தீவு)

முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – 2018/2019 (கிளிநொச்சி, முல்லைத்தீவு)

மேற்படி முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறியில் பயிலவுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 02.00மணியளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண  கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி.ஜெயா தம்பையா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். 

ஆறுதல் நிறுவன நிபுணத்துவ ஆலோசகர் திரு.சி.மாதவகுமாரன் அவர்களும், வளவாளர்களும், முல்லைத்தீவு வலய உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு வலய இணைப்பாளர்களும் பயிற்சி பெறவுள்ள கிளிநொச்சி வலய முன்பள்ளி  ஆசிரியர்கள் 45பேரும், துணுக்காய், முல்லைத்தீவு வலயத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் 45 பேருமாக மொத்தம் 90 முன்பள்ளி ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.