செய்திகள்
முன்பள்ளிக்கல்வி தொடர்பான கலந்துரையாடல்

முன்பள்ளிக்கல்வி தொடர்பான கலந்துரையாடல்

ஆறுதல் நிறுவனத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களின் வாண்மை விருத்தியைக் கருத்திற்கொண்டு வழங்கப்படும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறி தொடர்பான கலந்துரையாடல் 02.03.2019 சனிக்கிழமை மட்டக்களப்பிலும், 03.03.2019 ஞயிற்றுக்கிழமை திருகோணமலையிலும் நடைபெற்றது. 

02.03.2019 அன்று மட்டக்களப்பு சர்வோதயம் மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு இணைப்பாளர் திரு.மு.புவிராஜ் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆறுதல் நிறுவன உறுப்பினர்களும் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, கல்முனை, திருக்கோவில் டிப்ளோமா கற்கைநெறி வலய இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திருகோணமலை சென்/பிரான்சிஸ் சேவியர் மகாவித்தியாலயத்தில் காலை 11.00 மணியளவில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆறுதல் நிறுவன உறுப்பினர்கள் , றொட்டறிக்கழக உறுப்பினர்கள் மற்றும் திருகோணமலை, மூதூர் டிப்ளோமா கற்கைநெறி இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இக் கூட்டங்களில் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

  • 2018/2019 கல்வியாண்டில் முன்பள்ளி டிப்ளோமா பயிற்சிக்கு முன்பள்ளி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்காக முன்பள்ளி ஆசிரியர்கள் விபரங்களைச் சேகரித்தல். 
  • 2017/2018 கல்வியாண்டின் இறுதிப்பரீட்சைக்கு 80%  வரவின்மையால் தோற்றாத ஆசிரியர்களிற்கு மீள்பரீட்சை வைத்தல்.

 

மட்டக்களப்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது

 

திருகோணமலையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது