செய்திகள்
துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

ஆறுதல் நிறுவனத்தினுடாக 30.11.2018 அன்று MIOT அமைப்பின் நிதி அனுசரணையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

ஆறுதல் செயற்றிட்டத்தின் ஒரு கிராமமாக விளங்கும் உயரப்புலத்தில், முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட, கீழே குறிக்கப்பட்டுள்ள தேவை கருதிய 23 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

  • யா/பண்டத்தரிப்பு ஜசிந்தா றோ.க.த.க பாடசாலை        – 13 மாணவர்கள்
  • யா/பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை         – 05 மாணவர்கள்
  • யா/இளவாளை ஹென்றி அரசர் கல்லூரி                                – 02 மாணவர்கள்
  • யா/இளவாளை மெய்கண்டான் வித்தியாலயம்                 – 02 மாணவர்கள்
  • யா/இளவாளை கன்னியார்மடம் மகாவித்தியாலயம்   – 01 மாணவர்

அந்நிகழ்வானது யா/பண்டத்தரிப்பு ஜசிந்தா பாடசாலையில் நடைபெற்றது. இதில் ஆறுதல் நிறுவன நிபுணத்துவ ஆலோசகர் திருமதி.லோகினி எலிஸ் கலந்து கொண்டதுடன் ஆறுதல் நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.