சிறுவர் நட்புறவுப் பூங்கா

ஆறுதல் நிறுவனத்தினால் நடாத்தப்படும் சிறுவர் நட்புறவுப் பூங்கா செயற்றிட்டத்தின் கீழ் நடைபெறும் மாலை நேர வகுப்புக்களை இச் செயற்றிட்டத்திற்கு நிதி வழங்குனர்களில் ஒருவரான திருமதி.தியாகேஸ்வரி மகேந்திரன் அவர்கள் 2019.01.14 ஆம் திகதி பி.ப 3.30 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டார். 

இங்கு மாணவர்கள் தமது கற்றல் மற்றும் இணைபாடவிதானச் செயற்பாடுகளான ஆடல், பாடல், கவிதை, பேச்சு, ஆங்கிலக் கவிதை, பொதுஅறிவுத் துணுக்குகள் ஆகியவற்றின் மூலம் தமது தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தினர். அவற்றை நேரில் பார்த்து மகிழ்ந்ததுடன் அவர்களை தனது அறிவுரை மூலம் உற்சாகப்படுத்தி தொடர்ந்து இத்திட்டத்தை நடாத்துவதற்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்தார்.

 

 

Comments are closed.