செய்திகள்
‘‘உயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா”- மாலை நேர வகுப்புக்கள்

‘‘உயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா”- மாலை நேர வகுப்புக்கள்

 

ஆறுதல் நிறுவனத்தினால் 2017.09.30 ஆம் திகதியன்று இளவாலை உயரப்புலத்தில் ‘‘சிறுவர் நட்புறவுப் பூங்கா” என்னும் செயற்றிட்டத்தின் கீழ், தரம் 1 தொடக்கம் தரம் 6 வரையான பாடசாலை மாணவர்களுக்கு மாலை நேரக்கல்வி வழங்கப்பட்டு வருகின்றது.

2019.01.08 அன்று அத்திட்டத்திற்கு நிதி வழங்குனர்களில் ஒருவரான திருமதி.தியாகேஸ்வரி மகேந்திரன் அவர்களுடன் ஆறுதல் நிறுவனப்பணிப்பாளர், நிபுணத்துவ ஆலோசகர் மற்றும் செயற்றிட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்துரையாடினர். 

அக் கலந்துரையாடலின்போது எதிர்காலத்தில் எவ்வாறான பங்களிப்பினை இம் மாணவர்களின் கற்றல் மேம்பாட்டுக்கு வழங்க முடியும் என்பது தொடர்பாகவும் செயற்றிட்டத்தின் வளர்ச்சி, தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்பன தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

கலந்துரையாடலின் நிறைவில் நிதி வழங்குனருக்கு இத்திட்டத்தின் செயற்றிட்ட அலுவலர் செல்வி.அ.இமாக்குலேசியா அவர்களால் நிதி மற்றும் பௌதீக வளர்ச்சி அறிக்கைகள் என்பன கையளிக்கப்பட்டன.