‘‘இலங்கையில் முன்பள்ளி பராய விருத்திக்காக ஒன்றிணைவோம்” செயற்றிட்ட தொடக்கவிழா
ஆறுதல் நிறுவனமானது 2021 ஆம் ஆண்டினை எதிர்நோக்கி ” எனும் செயற்றிட்டத்தில் 18.12.2018 இல் இணைந்துள்ளமை சிறப்பான ஒரு தருணமாகும்.
SLIDA சர்வதேச இயக்குனர், Solidarite Laique நிறுவன தேசிய இயக்குனர், AFD நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிறுவனங்களின் பங்குதாரர்களாலும் இச்செயற்றிட்டத்தின் தொடக்கவிழா கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாலைதீவுக்கான பிரெஞ்சு தூதுவர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ஆறுதலின் தலைமை நிர்வாகி திரு.சுந்தரம் டிவகலாலா இந்நிகழ்வில் ஆறுதல் செயற்றிட்ட அலுவலர்களுடன் கலந்து கொண்டார். இது நம்பிக்கை தரும் நிகழ்வென்பதுடன் ஆறுதல் நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் மிகையாகாது.
திரு.சுந்தரம் டிவகலாலா – (தலைமை நிர்வாகி), திருமதி.லோகினி எலிஸ் (ஆலோசகர்), திருமதி.அம்பிகை போமன்(ஓருங்கிணைப்பாளர்-மேற்கு மாகாணம்), திருமதி.G.நளாயினி(ஆலோசகர்), திரு.J.கஸ்தூரன் (செயற்றிட்ட அலுவலர்), திருமதி.J.கேமநளினி(முன்பள்ளி தொழிற்சங்கத் தலைவர்), திருமதி.S.ஜெகதாரனி(முன்பள்ளி தொழிற்சங்கச் செயலாளர்), திருமதி.P.கலைவாணி(முன்பள்ளி தொழிற்சங்கக் கணக்காய்வாளர்) திருமதி.சசிகலா (முன்பள்ளி தொழிற்சங்க உறுப்பினர்) ஆகியோர் ஆறுதல் நிறுவனம் சார்பாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.