பரீட்சை மதிப்பீட்டுக் குழு கலந்துரையாடல்

வடமாகாண முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா இறுதிப் பரீட்சை பெறுபேற்றினை வெளியிடுவதற்கான பரீட்சை மதிப்பீட்டுக் குழு கலந்துரையாடல். இன்று ஆறுதல் நிறுவனத்தில் 2018/2019 கல்வியாண்டிற்கான இறுதிப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான கலந்துரையாடல் திரு.சு.மோகனதாஸ் (முன்னாள் துணைவேந்தர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இக் கலந்துரையாடலில் பரீட்சை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களான செல்வி.ஜெயா தம்பையா ( முன்பள்ளிக் கல்வி அபிவிருத்திப் பிரிவு வடமாகாணம்) , திரு.சி.தில்லைநாதன் ( ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்) , திரு.சி.மாதவகுமாரன், திரு.கு.சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கட்டுரை பிரசுரிப்பு

ஆறுதல் நிறுவனத்தின் மகுட வாசகமாகிய “வடலிகள் வானுயரும்” என்பதனை உளமாற ஏற்றுக் கொண்ட திரு மணிவண்ணன் அவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரையினை ஆறுதல் இணையப் பக்கத்தில் பிரசுரிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்… அன்பர் மணிவண்ணனிற்கு எங்கள் வடலிகள் சார்பில் மிக்க நன்றி. இத்தகைய ஆய்வுக்கட்டுரைகளை அன்பர்கள் யாரும் எழுதி இருந்தால் அவற்றின் தரம் கண்டு எங்கள் இணையப் பக்கத்தில் பிரசுரிப்பதற்கு விரும்புகின்றோம்

மரம் வளர்ப்போம்

வீட்டுக்கு வீடு மரம் வளர்த்து வீதி அனைத்தும் பசுமை செய்வோம். பூமியை நாம் குளிர்வித்து பூவுலகை நாம் காத்திடுவோம்.